அமெரிக்கா – ஈரான் இடையே இப்போ நடக்குற ‘சீன்’ ரொம்ப ‘காமெடியா’ போயிட்டு இருக்கு. ஈரான்ல நடக்குற போராட்டங்களை அடக்க அந்நாட்டு அரசு ரொம்ப ‘violent’-ஆ நடப்பதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்ல “ராணுவத்தை விட்டு அடிப்பேன்”னு பெரிய ‘build-up’ கொடுத்தாரு.
இதுக்கு நடுவுல டிரம்ப் கிட்ட அமெரிக்க ‘Defense’ டீம் ஒரு முக்கியமான ‘secret’-ஐ சொல்லிருக்காங்க. “அதிபர் அவர்களே, நாம ஈரான் மேல குண்டு போட்டாலும் சரி, ராணுவத்தை வச்சு மிரட்டினாலும் சரி, அங்க இருக்குற ஆட்சியை (regime) அசைக்கக்கூட முடியாது”னு ‘flat’-ஆ சொல்லிட்டாங்க.
இதைக் கேட்ட டிரம்ப், “அப்படியா சங்கதி? சரி, இப்போதைக்கு குண்டு போடுறதை தள்ளி வைப்போம்”னு சொல்லிட்டு, ஈரான் கிட்ட இருந்து வந்த “நாங்க இனிமேல் யாரையும் தூக்குல போடல” அப்படிங்கிற ‘assurance’-ஐ நம்பி இப்போதைக்கு அமைதி ஆயிட்டாரு.
இப்போதைக்கு அமெரிக்கா பண்ண ஒரே காரியம் என்னன்னா, ஈரானோட ‘shadow banking’ மற்றும் ஆயில் விக்கிற நெட்வொர்க் மேல கை வச்சதுதான்.
