ஒரு நாட்டின் உச்சபட்ச ஆன்மீகத் தலைவராக இருந்து, கோடிக்கணக்கான மக்களால் கை, கால்கள் தொட்டு வணங்கப்பட்ட ஒரு தலைவர், இன்று அதே மக்களால் ‘வேஸ்டு பீஸ்’ என்று விமர்சிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது உலக அரசியலையே அதிர வைத்துள்ளது. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கம்மேனியின் (Ayatollah Ali Khamenei) அதிகாரம் இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்துவிட்டதாகத் தெரிகிறது. அவரது உருவப்படங்கள் எரிக்கப்படுவதும், அவருக்கு எதிராக வீதிகளில் மக்கள் முழக்கமிடுவதும் ஒரு மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வருவதைக் காட்டுகிறது.
ஆனால், இந்தத் திடீர் மக்கள் எழுச்சிக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய ‘Global ஸ்கெட்ச்’ இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். ஈரான் அரசுக்கு எதிரான இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் அமெரிக்கா (USA) உறுதியாக நிற்பது இப்போது வெட்டவெளிச்சமாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, அங்குள்ள ஆட்சியை மாற்ற அமெரிக்கா நீண்ட காலமாகத் திட்டம் தீட்டி வந்தது. இப்போது மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்களுக்குத் தேவையான ஆதரவையும் தூண்டுதலையும் அமெரிக்க உளவு அமைப்புகள் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் மதத்தின் பெயராலும், புனிதத்தன்மையாலும் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த கம்மேனி, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான சட்டங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். ஆன்மீகத் தலைவராகப் போற்றப்பட்டவர் இன்று ‘கம்மேனி நிலை சரிந்துவிட்டது’ என்று சொல்லும் அளவுக்குத் தரக்குறைவாக விமர்சிக்கப்படுவது, அந்த நாட்டின் மதக் கோட்பாடுகளுக்கே விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த ‘Invisible’ தலையீடு ஈரானை இன்னொரு லிபியாவாகவோ அல்லது சிரியாவாகவோ மாற்றிவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
மத்திய அரசு மற்றும் உலக நாடுகளின் மௌனம் ஒருபுறம் இருந்தாலும், ஈரானின் வீதிகளில் நடக்கும் இந்தப் போராட்டம் வெறும் உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல; இது ஒரு வல்லரசு நாட்டின் ஆதிக்கப் போர் என்பதும் தெளிவாகிறது. தனது சொந்த நாட்டு மக்களே தன்னை எதிர்க்கும் நிலைக்கு கம்மேனி தள்ளப்பட்டது அவரது தனிப்பட்ட வீழ்ச்சியாகக் கருதப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள அமெரிக்காவின் நகர்வுகள் ஈரான் என்ற தேசத்தின் இறையாண்மைக்கே ஆபத்தாக முடிந்துவிடுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
