Posted in

பிரபல ஊடகவியலாளரிடம் நஷ்டஈடு கோரும் பாதுகாப்பு செயலாளர்

 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தனக்கு இழப்பீடு கோரி மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தன்னை அவதூறாக பேசிய காரணத்தினாலேயே இவ்வாறு அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் மூலம் தன்னை அவதூறு செய்ததாக கூறப்படும் யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தின் உரிமையாளர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன்படி, யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் அவதூறான செய்திகளை வெளியிட்டு ஜெனரல் குணரத்னவின் நற்பெயருக்கு சேதம் விளைவித்ததற்காக அசேல தர்மசிறியிடம் 500 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியை யூடியூப் சேனலில் வெளியிட்டமைக்காக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம மீதும் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

For the past two decades, Mr. Kannan has served as the Editor of Athirvu News. A veteran of the diaspora, he stands as a highly respected and seasoned journalist, shaping the voice of the Tamil community for over 20 years.